மாவட்ட செய்திகள்

பென்னாகரம் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை + "||" + woman died

பென்னாகரம் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை

பென்னாகரம் அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
பென்னாகரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பென்னாகரம்:
பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கோதை (வயது 55). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் பூங்கோதை தனது கணவருடன் வசித்து வந்தார். 
இந்தநிலையில் தீராத மூட்டு வலியால் அவதிப்பட்ட பூங்கோதை நேற்று காலை 6 மணி அளவில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்கோதை இறந்துவிட்டார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பென்னாகரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
பென்னாகரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
2. பென்னாகரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
பென்னாகரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
3. பென்னாகரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
பென்னாகரம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை