சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தகவல்


சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2021 8:57 PM GMT (Updated: 25 Nov 2021 8:57 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.

சேலம்
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து, தொடர்புடைய நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவர் ஹன்ஸ்ராஜ்வர்மா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ரூ.485 கோடி முதலீட்டில், 1,960 பேருக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து கோவை, சென்னை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தளவாட பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமைய உள்ளன.
செயல் திறன்கள்
ரூ.212 கோடியில் திறன்மிகு மையம், வடிவமைப்பு, திறன், ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல் திறன்களை வான்வெளி மற்றும் பாதுகாப்பு தளவான பொருட்கள் தொழிலகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வழங்கப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வைப்படி 2030-ம் ஆண்டிற்குள் தமிழக பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக துணை பொது மேலாளர் ராமசந்திரன், மண்டல மேலாளர் ராஜேந்திரன், சேலம் கிளை மேலாளர் கோவிந்தராஜ், சிறு, குறு தொழில் கூட்டமைப்பு தலைவர் மாரியப்பன், சேலம் உற்பத்திக்குழு தலைவர் இளங்கோவன், இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் கார்த்திக்கந்தப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story