மாவட்ட செய்திகள்

இருமத்தூர் பகுதியில்மது பதுக்கி விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது + "||" + one arrested

இருமத்தூர் பகுதியில்மது பதுக்கி விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது

இருமத்தூர் பகுதியில்மது பதுக்கி விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது
இருமத்தூர் பகுதியில் மது பதுக்கி விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது
மொரப்பூர்:
கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் பகுதியில் கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓட்டல் பின்புறம் மூட்டையுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அந்த நபர் இருமத்தூரை சேர்ந்த சுரேஷ் (வயது 42), என்பதும் இவர் போச்சம்பள்ளி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிவதும் தெரியவந்தது. மேலும் அவர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.