கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் 12 மின் கம்பங்கள் சேதம்


கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் 12 மின் கம்பங்கள் சேதம்
x
தினத்தந்தி 26 Nov 2021 7:46 PM IST (Updated: 26 Nov 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பள்ளிப்பட்டு பகுதியில் 9 மின் கம்பங்களும், சொரக்காய் பேட்டை என்ற இடத்தில் 3 மின் கம்பங்களும் உடைந்து விழுந்தன.ஆற்று தண்ணீரில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மின் கம்பிகளை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கொண்டு சென்று பழுதை சரி செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையாலும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதாலும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பெரு வெள்ளத்தால் பள்ளிப்பட்டு பகுதியில் 9 மின் கம்பங்களும், சொரக்காய் பேட்டை என்ற இடத்தில் 3 மின் கம்பங்களும் உடைந்து விழுந்தன. இதனால் பள்ளிப்பட்டு பகுதிக்கு மின்சாரம் தடைபட்டது. 

மின் கம்பங்கள் சேதம் அடைந்தது குறித்து அறிந்த பள்ளிப்பட்டு மின்வாரிய உதவி பொறியாளர் பாண்டியன் தலைமையில் ஊழியர்கள் விரைந்து சென்று பள்ளிப்பட்டு அருகே சொரக்காய்பேட்டை என்ற இடத்தில் மார்பளவு ஆற்று தண்ணீரில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மின் கம்பிகளை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கொண்டு சென்று பழுதை சரி செய்தனர். 8 மணி நேரத்தில் மின்வினியோகம் வழங்கப்பட்டது. இதை அந்த பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.


Next Story