கூடலூர் பகுதியில் நேந்திரன் வாழை சாகுபடி தீவிரம்


கூடலூர் பகுதியில் நேந்திரன் வாழை சாகுபடி தீவிரம்
x
தினத்தந்தி 26 Nov 2021 8:54 PM IST (Updated: 26 Nov 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் நேந்திரன் வாழை சாகுபடி தீவிரம்

கூடலூர்

கூடலூர் பகுதியில் நேந்திரன் வாழை சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. 

நேந்திரன் வாழை

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, நடுவட்டம் பகுதியில் மலைப்பிரதேச காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் கூடலூர் பகுதியில் தேயிலைக்கு இணையாக காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களும் விளைகிறது. 

இதேபோல் கூடலூர் பகுதியில் ஆண்டு முழுவதும் நேந்திரன் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் வாழைத்தார்கள் சிப்ஸ் தயாரிக்கவும், உணவு பதார்த்தங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

சாகுபடி தீவிரம்
 
குறிப்பாக ஓணம் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வெளி மாநில மொத்த வியாபாரிகள் கூடலூர் விவசாயிகளிடம் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் பயனடைந்து வந்தனர். 

இந்த நிலையில் நேந்திரன் வாழைத்தாருக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இருந்தபோதிலும் ஓணம் பண்டிகையை முன்வைத்து விவசாயிகள் தற்போது நேந்திரன் வாழை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.  

விலை குறைவு 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டு ஜனவரியில் நேந்தி ரன் வாழை கிலோ ரூ.38 வரை கொள் முதல் செய்யப்பட்டது. தற்போது அதன் விலை குறைந்து ரூ.22 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. 

இருந்த போதிலும் வருகிற ஓணம் பண்டிகையின்போது நேந்திரன் வாழைத்தார் களுக்கு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை கருத்தில் கொண்டு ஏராளமான ஏக்கரில் நேந்திரன் வாழைகள் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. 10 மாதத்துக்கு பிறகு அறுவடை செய்யப்படும் என்றனர்.


Next Story