தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்பமனு வினியோகத்தை நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்பமனு வினியோகத்தை நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினருக்கு விருப்பமனு வினியோகத்தை நேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விளாத்திகுளம்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்பமனு வினியோகம் நேற்று விளாத்திகுளத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எட்டயபுரம் அ.தி.மு.க நகர செயலாளர் ராஜகுமார் முன்னிலை வகித்தார். அவைதலைவர் பெருமாள் வரவேற்று பேசினார். நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சி உறுப்பினர் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான விருப்பமனுவினை எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமாிடம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு அவைதலைவர் கணபதி, வார்டு செயலாளர் கார்ட்டன் பிரபு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் கோவில்பட்டி நகராட்சி, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கான விருப்பமனு வினியோகத்தை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.
பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடுவோருக்கு ரூ.1,500-ம், நகராட்சி பகுதிகளில் போட்டியிடுவோருக்கு ரூ.2,500-ம் விருப்பமனுவுக்கு கட்டணமாக பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொருளாளர் வேலுமணி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எஸ்.பி.சண்முகநாதன்
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம் நகராட்சி, ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், தென்திருப்பேரை, ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோருக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் விருப்ப மனுவை போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வழங்கினார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா விருப்ப மனுவை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story