இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம்
கள்ளக்குறிச்சி அருகே இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் ஊராட்சி மாமாந்தூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் கோபி, ஆனந்தன், கள்ளக்குறிச்சி பள்ளித்துணை ஆய்வாளர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரவிந்தன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் வாணியந்தல் ஆறுமுகம், ராமமூர்த்தி, முருகன், சண்முகம், வட்டார கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story