‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
எரியாத தெருவிளக்கு
பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் மக்கள் வெளியே நடமாடவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
-கணேசன், கல்லுப்பட்டி.
மழைநீர் வடிகால் வசதி
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ்நகரில் மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லை. இதனால் மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இது பொதுமக்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது. எனவே மழைநீர் வடிகால்களை முறையாக அமைக்க வேண்டும்.
-அய்யப்பன், பாலகிருஷ்ணாபுரம்.
ஊராட்சி மன்ற கட்டிடம் சேதம்
பெரியகுளம் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம் அடைந்து விட்டது. மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. எனவே புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும்.
-வல்லரசன், பெரியகுளம்.
சாலை சீரமைக்கப்படுமா?
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி பிரவான்பட்டி கிராமத்தின் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அவசர தேவைக்கு வாகனங்களில் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.
Related Tags :
Next Story