விழுப்புரம் மாவட்டத்தில் 13 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


விழுப்புரம் மாவட்டத்தில் 13 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 26 Nov 2021 10:29 PM IST (Updated: 26 Nov 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 13 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவு


விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கெடார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மகாலிங்கம் அனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த சங்குராஜன் செஞ்சி போலீஸ் நிலையத்திற்கும், கஞ்சனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் கஞ்சனூர் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூணன் கெடார் போலீஸ் நிலையத்திற்கும், கண்டாச்சிபுரம் அன்பழகன் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி பரணிநாதன் நல்லான் பிள்ளை பெற்றாள் போலீஸ் நிலையத்திற்கும், திருவெண்ணெய்நல்லூர் குருபரன் விழுப்புரம் தாலுகாவுக்கும், வளவனூர் மருதப்பன் கண்டாச்சிபுரத்திற்கும், திண்டிவனம் பலராமன் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், ஒலக்கூர் ராஜேந்திரன் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும், அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கும், கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.


Next Story