சோளிங்கரில் ஆழ்துளை கிணற்றிலிருந்து தானாக பொங்கி வரும் தண்ணீர்
ஆழ்துளை கிணற்றிலிருந்து தானாக பொங்கி வரும் தண்ணீர்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 450 அடி ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர். தற்போது தொடர் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் நரிக்குறவ மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் தானாக பொங்கி வழிந்து ஓடுகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணற்றில் இருந்து தானாக வெளியேறும் தண்ணீரை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story