காட்பாடியில் ரெயில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைப்பு
காட்பாடியில் ரெயில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைப்பு
காட்பாடி
ரெயில் நடைமேடை கட்டணம் கடந்த ஆண்டு ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. பயணிகளை வழியனுப்ப செல்லும் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
ரெயில்வே நிர்வாகம் கொரோனாவை காரணம் காட்டியது. ரெயில் நடைமேடை கட்டணம்குறைவாக இருப்பதால் நிறைய பேர் ரெயில் நிலையத்துக்குள் வருவார்கள். அதனால் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது என ரெயில்வே நிர்வாகம் கூறியது.
இந்த நிலையில் ரெயில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக நேற்று முதல் குறைக்கப்பட்டது. காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று ரெயிலில் உறவினர்களை வழியனுப்ப சென்ற குடும்பத்தினர், நண்பர்கள் ரெயில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டதற்கு மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story