கொரோனா ஊக்கத்தொகை வழங்கக்கோரி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கொரோனா ஊக்கத்தொகை வழங்கக்கோரி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Nov 2021 11:54 PM IST (Updated: 26 Nov 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊக்கத்தொகை வழங்கக்கோரி அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் இளங்கோ, பொருளாளர் ஞானபாரதி உள்பட அனைத்து மருந்தாளுனர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கொரோனா ஊக்கத்தொகை
மருந்தாளுனர்கள், தலைமை மருந்தாளுனர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 1,200-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்.
42 துணை இயக்குனர் அலுவலக மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story