தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Nov 2021 1:39 AM IST (Updated: 27 Nov 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்படுமா?
துவரங்காடு மத்தியாஸ் நகர் பகுதியில் கல்லடியான்கோணம் தெரு  உள்ளது. இந்த தெருவில் உள்ள சாலை மழையால் சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுப்பார்களா?.
   -மாசிலாமணி,
 மத்தியாஸ்நகர்.
ஓடையை தூர்வார வேண்டும் 
கருங்கல் பஸ்நிலையம் அருகில் வேன் நிறுத்தத்துக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையில் உள்ள கழிவுநீர் ஓடையை முறையாக பராமரிக்காததால் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் வடியாமல் பாதையில் தேங்கி நிற்பதால் வியாபாரிகள், பாதசாரிகள்  அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை சீரமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும். 
 -விபின், வேங்கோடு.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் இருளப்பபுரத்தில் மின்வாரிய அலுவலகம் உள்ளது.  இந்த பகுதியில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்
-வே.சிவக்குமார், கோட்டார்.
பக்கச்சுவர் தேவை
வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட சேனாப்பள்ளியில் ஊச்சிகால் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. தற்போது, கால்வாயின் கரைகள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயின் இரு கரைப்பகுதிகளிலும் பக்கச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவதாஸ், ராமநாதபுரம்.
வாகன ஓட்டிகள் அவதி
வட்டவிளையில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து வேதநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையோரத்தில் உள்ள செடிகளை அகற்றி, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                        -அமுதன், வட்டவிளை.
செடி, கொடிகள் அகற்றப்பட்டது
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர் 4-வது வார்டு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அருகில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அவை மின்கம்பத்தில் படர்ந்து காணப்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தில் படர்ந்திருந்த செடி,கொடிகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த துறையினரையும், செய்தியை வெளியிட்ட‘தினத்தந்தி'-க்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர். 

Next Story