வீட்டில் பதுக்கி வைத்த 150 கிலோ குட்கா பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்த 150 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 27 Nov 2021 1:55 AM IST (Updated: 27 Nov 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

அழகியமண்டபத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிேலா குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பத்மநாபபுரம், 
அழகியமண்டபத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிேலா குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குட்கா விற்பனை
தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் தக்கலை, அழகியமண்டபம் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அழகியமண்டபம் பகுதியில் முகமதுசாலி (வயது 54) என்பவர் நடத்தி வரும் கடையை சோதனையிட்ட போது அங்கு தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
150 கிலோ பறிமுதல்
இதையடுத்து அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது முகமது சாலி தனது வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து, சிறிது சிறிதாக கடைக்கு எடுத்து வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து முகமது சாலியை போலீசார் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ேசாதனை நடத்தினர். 
அப்போது அங்கு மூடை மூடையாக பதுக்கி வைத்திருந்த 150 கிேலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. 
இதையடுத்து வியாபாரி முகமதுசாலியை போலீசார் கைது செய்து பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், முகமதுசாலிக்கு குட்கா பொருட்கள் எங்கிருந்து வந்தது. இதில் தொடர்பு உடையவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story