தீக்குளித்த இளம்பெண் சாவு
சேரன்மாதேவியில் தீக்குளித்த இளம்பெண் இறந்தார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஞ்சாயத்து யூனியன் எதிரே உள்ள பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். அவருடைய மனைவி தேவி (வயது 35). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடனை செலுத்த முடியாத நிலையில் தேவி மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் தேவி கடந்த 18-ந் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனைக்கண்ட கணவர் தங்கராஜ் தீயைஅணைக்க முயற்சித்த போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. உடல் கருகிய நிலையில் தேவியை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக தேவி உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story