திசையன்விளையில் பொதுமக்கள் திடீர் போராட்டம்


திசையன்விளையில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2021 2:15 AM IST (Updated: 27 Nov 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திசையன்விளை:
தொடர் மழை காரணமாக, திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் ஓடையின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் முதுமொத்தன்மொழி வழியாக மாற்றுப்பாதையில் நீண்ட தூரம் சுற்றி செல்கின்றன. சிலர் ஆபத்தை அறியாமல் தரைமட்ட பாலத்தின் மீது வெள்ளத்தில் தத்தளித்தவாறு வாகனங்களில் செல்கின்றனர்.
எனவே தரைமட்ட பாலத்தின் அருகில் ராட்சத குழாய்கள் அமைத்து தற்காலிக தாம்போதி பாலம் அமைக்க வேண்டும். பின்னர் அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைபாலன் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று மாலையில் தரைமட்ட பாலத்தில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story