பஸ்நிறுத்தத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
சேரன்மாதேவியில் பஸ்நிறுத்தத்தில் மயங்கி கிடந்த முதியவர் இறந்தார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் நாராயணதாஸ் (வயது 64). குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர் சம்பவத்தன்று சேரன்மாதேவியை அடுத்த கூனியூர் பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய சேரன்மாதேவி போலீசார், நாராயணதாசின் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
Related Tags :
Next Story