மாநில செய்திகள்

கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி கடற்படை அதிகாரி சாவு + "||" + Naval officer killed in giant wave in Kovalam sea

கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி கடற்படை அதிகாரி சாவு

கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி கடற்படை அதிகாரி சாவு
கோவளம் கடலில் ராட்சத அலையில் சிக்கி மனைவி, மகள் கண் எதிேரயே கடற்படை அதிகாரி பரிதாபமாக இறந்தார்.
சென்னை,

சென்னையை சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மகன் சுரேஷ் (வயது 36). இவர், இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டராக டெல்லியில் பணியாற்றி வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் டெல்லியில் இருந்து சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, மகள், மாமனார் என குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கோவளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

மாலை 5 மணிக்கு கோவளம் கடற்கரை அருகே சுரேஷ் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக்கொண்டிந்தார். அவரது மகள், கடலில் குளிக்க ஆசைப்பட்டதால் மகளுக்காக கடலில் இறங்கினார். பின்னர் மகளை கரையில் விட்டுவிட்டு மீண்டும் கடற்படை வீரர் சுரேஷ் மட்டும் கடலில் குளிக்கச் சென்றார்.

ராட்சத அலையில் சிக்கி பலி

அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலையில் சிக்கிய சுரேஷ், தனது மனைவி, மகள் கண் எதிரேயே கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இது குறித்து கேளம்பாக்கம் மற்றும் கோவளம் கடலோர போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கப்பல் படையினர் 3 ரோந்து கப்பல் மூலமும், விமானப்படையில் ஒரு ஹெலிகாப்டர் மூலமும் தேடினர்.

இதற்கிடையில் நேற்று மதியம் 1 மணிக்கு சுரேஷின் உடல் மாமல்லபுரம் அருகே புலிகுகை பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கியது. இது குறித்து அறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரி துணை மேலாளர் திடீர் சாவு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரி துணை மேலாளர் திடீர் சாவு.
2. டாப்சிலிப்பில் பொங்கல் விழாவில் பங்கேற்ற வளர்ப்பு யானை தாக்கி பாகன் சாவு
டாப்சிலிப் யானைகள் முகாமில், பொங்கல் விழாவில் பங்கேற்ற வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு
போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பனி மூட்டம் காரணமாக விபத்து கார்-வேன் மோதல்; 3 பேர் சாவு
உத்திரமேரூர் அருகே பனி மூட்டம் காரணமாக கார்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.