கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து ெகாள்ளைைய அரங்கேற்றிய ேபாலீஸ் ஏட்டு


கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து ெகாள்ளைைய அரங்கேற்றிய ேபாலீஸ் ஏட்டு
x
தினத்தந்தி 26 Nov 2021 9:13 PM GMT (Updated: 26 Nov 2021 9:13 PM GMT)

அருப்புக்கோட்டையில் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து முன்னாள் அதிகாரியின் வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஒரு ேபாலீஸ் ஏட்டு என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அருப்புக்கோட்ைட,
அருப்புக்கோட்டையில் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து முன்னாள் அதிகாரியின் வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஒரு ேபாலீஸ் ஏட்டு என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை - பணம் கொள்ளை 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி லட்சுமி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது80). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். 
இந்தநிலையில் கடந்த 26.10.21 அன்று கணேசன் வீட்டிற்கு காரில் வந்த கும்பல் கணேசனின் வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி அவரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மற்றும் 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பியது. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் அளித்தார். 
தனிப்படை அமைப்பு 
போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 
இந்தநிலையில் நேற்று காந்திநகர் அருகே காரில் சந்தேகப்படும்படியாக நின்றவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் அவர்கள் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கோபிகண்ணன்(30), ராஜபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார்(51), திருமங்கலத்தை சேர்ந்த மகேஷ் வர்மா(27), அஜய் சரவணன்(29), மதுரையை சேர்ந்த அலெக்ஸ் குமார்(36), மூர்த்தி (34) என்பதும், இவர்கள்தான் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் வீட்டில் கொள்ளையடித்ததும், இந்த கொள்ளைக்கு நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு இளங்குமரன் திட்டம் தீட்டி கொடுத்து மூளையாக செயல்பட்டதுமான திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. 
6 பேர் கைது 
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.88 ஆயிரம், 2¼ பவுன் நகை, கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இந்த சம்பவத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்து ஏட்டு இளங்குமரன் தலைமறைவானார். ஏட்டு இளங்குமரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்துகொடுத்து கொள்ளையை அரங்கேற்றியது ஒரு போலீஸ்காரர் என்பதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவான ஏட்டு இளங்குமரன், லட்சுமி நகர் 3-வது தெருவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story