பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு முகாம்
பழங்குடியின கிராமத்தில் விழிப்புணர்வு முகாம்
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி கோத்தகிரி அருகே உள்ள மெட்டுக்கல் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. அங்குள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் நடந்த முகாமிற்கு நீலகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி தலைமை வகித்தார். கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சமூக நலத்திட்ட சிறப்பு துணை தாசில்தார் சிராஜ்நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பழங்குடியின மக்களுக்கு மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வனப்பகுதி மற்றும் எல்லையோர கிராமங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது.
உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதில் பழங்குடியின மக்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் கோரி 24 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை பரிசீலனை செய்து விரைவில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மெட்டுக்கல் பாவியூர், கொப்பையூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story