2 குட்டிகளை முதுகில் சுமந்தவாறு வீட்டுக்குள் நுழைய முயன்ற கரடி


2 குட்டிகளை முதுகில் சுமந்தவாறு வீட்டுக்குள் நுழைய முயன்ற கரடி
x
தினத்தந்தி 27 Nov 2021 7:58 PM IST (Updated: 27 Nov 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

2 குட்டிகளை முதுகில் சுமந்தவாறு வீட்டுக்குள் நுழைய முயன்ற கரடி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியையொட்டி உள்ள கிராமம் என்பதால் காட்டுயானை, காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு தாய் கரடி ஒன்று, அங்குள்ள ஒரு வீட்டுக்குள் சுற்றுச்சுவர் மீது ஏறி நுழைய முயன்றது. இதை அங்கு வசிப்பவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டனர். 

மேலும் ஜன்னல் வழியாக சத்தம் போட்டு கரடிகளை விரட்டினர். இதனால் அைவ அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்து, வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கரடிகள் வீட்டுக்குள் நுழைய முயன்ற வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story