ஆதிவாசி மக்கள் குறைதீர்ப்பு முகாம்
ஆதிவாசி மக்கள் குறைதீர்ப்பு முகாம்
கூடலூர்
மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூதநத்தம்கிராமத்தில் அனைத்துத்துறை அலுவலர்களின் சார்பில் ஆதிவாசி மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி தலைமை தாங்கினார். சிறப்பு தாசில்தார் குமாரராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உண்டி மாயார், மாயார், பூத நத்தம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 55 மனுக்கள் பெறப்பட்டு துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் ஆதிவாசி மக்களுக்கு சாதி சான்றிதழும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story