மாவட்ட செய்திகள்

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு + "||" + Minister EV Velu inspected the arrangements for the ceremony attended by MK Stalin

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி விரைவில் திறக்கப்பட உள்ளன. திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடம் ரூ.398 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. கல்லூரியுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடங்கள் 6 தளங்களை கொண்டது,  இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன. அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து  மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை தேர்வு செய்து சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ஆய்வு

இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விழா மேடை மற்றும் பொதுமக்கள், பயனாளிகள் அமரும் இடம் குறித்த வரைபடத்தினை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, பொதுப்பணித்துறை (மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுப்பையா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரிபெருமாள், ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், தி.மு.க.ஒன்றிய செயலாளர் அரவிந்தன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினருமான வாணியந்தல்.ஆறுமுகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சண்முகம், ராமமூர்த்தி, காமராஜ், பெருமாள், நகர செயலாளர் சுப்ராயலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரை செய்களத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு
மானாமதுரை செய்களத்தூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
2. வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கண்டமங்கலம், வானூர் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
3. மின்மயமான ரெயில் பாதையில் விரைவில் ஆய்வு
மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் திட்ட பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்துள்ள நிலையில் விரைவில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய உள்ளார்.
4. அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு
அருப்புக்கோட்டை அருகே அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
5. புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு
சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.