மீண்டும் பெய்த மழையால் 2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கின
வேதாரண்யம் பகுதியில் வயல்களில தேங்கிய தண்ணீர் வடிந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் 2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் வயல்களில தேங்கிய தண்ணீர் வடிந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் 2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கின
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளிலும், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் நெற்பயிர்கள் மூழ்கி இருந்தது.இதை தொடர்ந்து வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை கடும் சிரமத்துடன் விவசாயிகள வெளியேற்றி விட்டு பூச்சி மருந்து மற்றும் உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருன்றனர்.இந்த நிலையில் மீண்டும் வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 2-வது முறையாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளது.
விவசாயிகள் வேதனை
மீண்டும் பெய்த மழையால் 2-வது முறையாக நெற்பயிர்கள் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியும், வெளிநபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியும் சம்பா சாகுபடியில் ஈடுபட்டோம்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதை தொடர்ந்து வயல்களில் இருந்த தண்ணீரை வெளியேற்றி உரம், பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தோம்.
நிவாரணம்
இந்த நிலையில் மீண்டும் மழை பெய்து 2-வது முறையாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாகையில் நேற்று 4-வது நாளாக விட்டு விட்டு தூரல் மழை பெய்தது. மழை காரணமாக ஓடம் போக்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றை சுற்றி உள்ள, கருவேலி, நரியங்குடி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் கரையோரம் உள்ள வயல் பகுதிகளில் மழைநீர் இடுப்பளவு தேங்கியது. வயல்களில் தேங்கிய மழைநீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
Related Tags :
Next Story