புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 Nov 2021 9:08 PM IST (Updated: 27 Nov 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பொள்ளாச்சி ஆறுமுகம் பிள்ளை லைன் பகுதியில் மாரியம்மன் கோவில் எதிரே குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்தார்த்தன், பொள்ளாச்சி.

சேறும், சகதியுமான சாலை

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி கணபதி நகர் முதல் தெருவில் தொடர் மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்று வரவே முடியவில்லை. மேலும் அங்கு சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறி உள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தார்சாலை அமைத்து, புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

ஜெயா, சூளேஸ்வரன்பட்டி.

மூடப்படாத பள்ளம்

கோவை மாநகராட்சி 89-வது வார்டு சுண்டக்காமுத்தூர் ராயப்பா நகரில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளம், கான்கிரீட் போட்டு மூடாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை இருக்கிறது. எனவே அந்த பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

நாகராஜ், சுண்டக்காமுத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாநகராட்சி 61-வது வார்டு ஒண்டிபுதூர் சேரன் நகரில் தொடர் மழையால் சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முத்து, ஒண்டிபுதூர். 

தொற்று நோய் பரவும் அபாயம்

கோவை சங்கனூர் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக வாகனத்திலும், நடந்தும் செல்பவர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சின்னதுரை, சங்கனூர்.

தெருவிளக்கு இல்லை

கோவை ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்த முன்வர வேண்டும்.

சந்தோஷ்குமார், ஒண்டிபுதூர். 

மதுப்பிரியர்கள் தொல்லை

ஆனைமலையில் இருந்து கோட்டூர் செல்லும் சாலையில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு கால்வாய் செல்கிறது. மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கொண்டு மதுபிரியர்கள் இந்த கால்வாய் ஓரத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் காலி பாட்டிலை கால்வாயில் வீசி எறிந்து செல்கின்றனர். சிலர் போதையில் மதுபாட்டில்களை போட்டு உடைப்பதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை போலீசில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பகல் நேரங்களிலேயே கூட்டம், கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் பொது இடத்தில் மதுப்பிரியர்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித், ஆனைமலை.

புதர் மண்டி கிடக்கும் மைதானம்

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மைதானம் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளில் புகலிடமாக மாறி வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மைதானத்தை சுத்தப்படுத்தி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமிநாதன், பொள்ளாச்சி.


Next Story