செஞ்சி அருகே பெரிய ஏரியின் மதகுப்பகுதியில் விரிசல்


செஞ்சி அருகே  பெரிய ஏரியின் மதகுப்பகுதியில் விரிசல்
x
தினத்தந்தி 27 Nov 2021 10:12 PM IST (Updated: 27 Nov 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே பெரிய ஏரியின் மதகுப்பகுதியில் விரிசல் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது

செஞ்சி

செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட சென்னாலூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்த ஏரி நிரம்பி வழிந்தது. உபரிநீர் வெளியேற்றப்படும் கால்வாய் தூர்ந்து போனதால் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து சுமார் 150 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மீண்டும் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரியின் மதகுப்பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஏரி உடையும் அபாயம் இருந்ததால் அதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து செஞ்சி பகுதியின் தனி அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருமான ரகுகுமார், தாசில்தார் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று பெரிய ஏரியின் மதகு பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசலை பார்வையிட்டனர். பின்னர் இதை  உடனடியாக சரிசெய்ய செஞ்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயினி நேரடி மேற்பார்வையில் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களைக் கொண்டு விரிசல் ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இந்த ஏரி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தும் ஊரக வளர்ச்சித் துறை யினர் முன்வந்து மேற்படி பணிகளை செய்தமைக்காக கிராம மக்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story