கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்
வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
திருப்பூர்
வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நோய் பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், முககவசம் அணிதல், கை கழுவுதல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு ஊக்குவிக்கிறது. புதிய விதிகளை அரசு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி தெருக்கள் மற்றும் பொது இடங்கள், சந்தைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ஓய்வறைகள், தொழிற்சாலைகள், கடைகள் போன்ற இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரூ.5 ஆயிரம் அபராதம்
பொது சுகாதார துறையின் மூலம் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவமனை மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாத பணியாளர்கள் இருந்தால் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story