கூலி தொழிலாளி வீட்டில் திருட்டு


கூலி தொழிலாளி வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 27 Nov 2021 11:00 PM IST (Updated: 27 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் கூலி தொழிலாளி வீட்டில் கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

அரக்கோணம்

அரக்கோணத்தில் கூலி தொழிலாளி வீட்டில் கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜவஹர் நகரைச் ரே்ந்தவர் கணேஷ் (வயது 30). கூலி தொழிலாளி. 

நேற்று  இரவு வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள சகோதரர் வீட்டில் தங்கி உள்ளார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.700 மற்றும் 25 புடவைகள், ஏ.டி.எம்.கார்டு, வங்கி பாஸ் புத்தகம், வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிவிட்டு தப்பி உள்ளனர்.
கதவின் பூட்டு மற்றும் பீரோவை கடப்பாரையால் உடைத்துள்ளனர்.

 தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

மர்மநபர்கள் விட்டு சென்ற கடப்பாரையை அரக்கோணம் டவுன் போலீசார் கைப்பற்றி தடயங்களை பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Next Story