தோகைமலையில் பலத்த மழை; 2 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன
தோகைமலையில் பலத்த மழை காரணமாக 2 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன.
தோகைமலை,
தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 26 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இந்தநிலையில், வடசேரி ஊராட்சி கார்ணாம்பட்டி ரோட்டில் உள்ள கோழிகளம் பகுதியை சேர்ந்த ரெங்கம்மாள் என்பவரின் ஓட்டு வீடு நேற்று இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இதேபோல் சூரியன் நகரில் வசித்து வரும் நீலாவதி (வயது 35) என்பவருடைய ஓட்டு வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று சேதம் அடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story