ஆசிரியை உள்பட 2 பேர் வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள்
அருப்புக்கோட்டை அருகே ஆசிரியை உள்பட 2 பேர் வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் டி.வி.ைய உடைத்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஆசிரியை உள்பட 2 பேர் வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் டி.வி.ைய உடைத்தனர்.
ஆசிரியை
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி வி.ஐ.பி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரெஜினாமேரி (வயது 52). கமுதியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு 10 நாட்களுக்கு ஒருமுறை வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஊருக்கு வந்த ரெஜினாமேரி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. வீட்டின் உள்ளே இருந்த டி.வி. உடைக்கப்பட்டிருந்தது.
பொருட்கள் சிதறி கிடந்தன
அதேபோல் அவரது வீட்டின் அருகில் உள்ள பரளச்சி கீழ்குடியை சேர்ந்த முருகானந்தம் (59) என்பவரின் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறிகிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து கொள்ளைமுயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த 2 வீடுகளிலும் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில் டி.வி.யை உடைத்து சென்று இருக்கலாம் என போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story