குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
தொடர் மழைகாரணமாக குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திருச்சி, நவ.28-
தொடர் மழைகாரணமாக குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. இதில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மழைநீர் சூழ்ந்துள்ளது
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிகிறது. திருச்சி கோரையாற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது.
இந்த மழைநீர் திருச்சி மாநகரில் குடியிருப்புகளிலும் புகுந்தது. குறிப்பாக கருமண்டபம், பொன் நகர், இனியானூர், வர்மா நகர், வின்ஸ், அன்பு அவன்யூ பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருச்சியிலிருந்து மணப்பாறை மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் கருமண்டபம் பகுதியில் மழை நீரில் கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சாலைகள் முழுவதும் கன மழையால் பள்ளமாகி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மழை நீர் சூழ்ந்தது.
150 பேர் மீட்பு
இதேபோல் உய்யகொண்டான் கால்வாயிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம் குழுமணி சாலையில் உள்ள லிங்கா நகர், செல்வநகர், அருள் நகர், அரவிந்த் நகர், சீதா லட்சுமி நகர், சண்முகம் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியூ ராஜா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 150-க்கும் மேற்பட்டோரை ரப்பர் படகு மூலம் மீட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகள் நேற்று இரவு வரை நீடித்தது. இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் குடியிருப்புகளில் தொடர்ந்து மழை நீர் வடியாமல் உள்ளது. நீரின் மட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

Related Tags :
Next Story