25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய நாரணமங்கலம் பெரிய ஏரி


25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய நாரணமங்கலம் பெரிய ஏரி
x
தினத்தந்தி 28 Nov 2021 1:22 AM IST (Updated: 28 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

25 ஆண்டுகளுக்கு பிறகு நாரணமங்கலம் பெரிய ஏரி நிரம்பியது.

பெரம்பலூர்:

ஏரிகள் நிரம்பின
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 59 ஏரிகள் ஏற்கனவே நிரம்பின. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக நாரணமங்கலம், களரம்பட்டி, எசனை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பின.
இதில் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. அதன்பின்னர் அந்த ஏரி நிரம்பியதில்லை. இந்நிலையில் தற்போது பெய்த பலத்த மழையால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது.ஏரி நிரம்பியதால் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான எக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
17 ஆண்டுகளுக்கு பிறகு...
இதேபோல் 17 ஆண்டுகளுக்கு பிறகு எசனை ஏரி நிரம்பியுள்ளது. இதையடுத்து அந்த ஏரிகளை பார்வையிட அப்பகுதி மக்கள் படையெடுத்து செல்கின்றனர். நேற்று மாவட்டத்தில் பகல் நேரத்தில் பலத்த மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசாக மழை தூறியது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
செட்டிகுளம்-21, பாடாலூர்-21, அகரம்சீகூர்-28, லெப்பைக்குடிக்காடு-22, புதுவேட்டக்குடி-13, பெரம்பலூர்-21, எறையூர்-20, கிருஷ்ணாபுரம்-7, தழுதாழை-14, வி.களத்தூர்-16, வேப்பந்தட்டை-19.

Related Tags :
Next Story