மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பலி


மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 28 Nov 2021 1:26 AM IST (Updated: 28 Nov 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

ராதாபுரம்:
ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கூலி தொழிலாளி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் காசி. கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மாரி கிருஷ்ணன் (வயது 3) என்ற மகனும், 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.
நேற்று மாலையில் குழந்தை மாரி கிருஷ்ணன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன், வீட்டில் தரையில் வைக்கப்பட்ட மின்விசிறிக்காக அமைக்கப்பட்ட சுவிட்சு பெட்டியை தூக்கினான்.

மின்சாரம் தாக்கி...

இதில் மாரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தான். உடனே அவனை குடும்பத்தினர் காப்பாற்றி சிகிச்சைக்காக ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாரிகிருஷ்ணன் இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாபுரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story