வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 28 Nov 2021 2:05 AM IST (Updated: 28 Nov 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மனைவி மனோன்மணி (வயது 40). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இன்னாசி மகன் கிறிஸ்ேடாபர் ராஜ்க்கும் (21) இடை யே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ரேஷன் பொருள் வாங்கச் சென்ற மனோன்மணியை, கிறிஸ்டோபர் ராஜ் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுதொடர்பாக வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபர் ராஜை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரைத்தார். 
இதனை கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் ஏற்றுக் கொண்டு குண்டர் சட்டத்தில் கிறிஸ்டோபர் ராஜை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் குண்டர் சட்டத்தில் கிறிஸ்டோபர் ராஜ் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை, சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.

Next Story