போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது


போலீசாரை மிரட்டிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 2:07 AM IST (Updated: 28 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் போலீசாரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே மாங்குடியில் உள்ள பெட்டிக் கடையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் செந்தில்குமார், முருகன் ஆகியோர் சென்று பெட்டிக்கடையை சோதனை செய்ய முயன்றனர். அப்போது கடையை நடத்தி வரும் மாங்குடி காமராஜர் காலனியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 48), அவரது உறவினர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த விஜயகுமார் (48) ஆகியோர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலம், விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 30 பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Next Story