குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்


குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்
x
தினத்தந்தி 28 Nov 2021 2:28 AM IST (Updated: 28 Nov 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த தேப்பெருமாநல்லூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. அதுமட்டுமின்றி கழிவுநீருடன், மழைநீரும் கலந்து குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதுமட்டுமின்றி, தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-ரமேஷ், தேப்பெருமாநல்லூர்.

தஞ்சை விளார் பகுதியில் உள்ள அன்னை இந்திரா நகர், சேவியர்நகர், கலைஞர்நகர், சண்முகநாதன்நகர் மற்றும் பாத்திமாநகரில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். மேலும், இவை சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், தஞ்சை.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த வளப்பிரமன்காட்டை அடுத்த பனஞ்சேரி குளக்கரை மற்றும் புதுக்காளி தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் தினமும் 2 கி.மீ தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேற்கண்ட பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பனஞ்சேரி.

தஞ்சை தெற்குவீதியில் உள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் ஆங்காங்கே கூட்டமாக நிற்கின்றன. மேலும், இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், கடைவீதிகளுக்கு வரும் பொதுமக்களை சில மாடுகள் முட்டி விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் கடைவீதிகளுக்கு வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெற்குவீதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
-சக்கரபாணி, நாகம்மாள்நகர் தஞ்சை


Next Story