கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தின் கீழ் தளவாடங்கள் ஏற்றி சென்ற லாரி சிக்கியது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தின் கீழ் தளவாடங்கள் ஏற்றி சென்ற லாரி சிக்கியது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 4:07 AM IST (Updated: 28 Nov 2021 4:07 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தின் கீழ் எந்திர தளவாடங்கள் ஏற்றி சென்ற லாரி சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலத்தின் கீழ் எந்திர தளவாடங்கள் ஏற்றி சென்ற லாரி சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
லாரி சிக்கியது 
கிருஷ்ணகிரி நகரை சுற்றி கன்னியாகுமரி-காஷ்மீர், கிருஷ்ணகிரி-சென்னை, கிருஷ்ணகிரி-புதுச்சேரி, கிருஷ்ணகிரி-குப்பம், ஓசூர்-பெங்களூரு என 5 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியாக கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் நிறுவனத்திற்கு எந்திர தளவாடங்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. இந்த லாரி, கிருஷ்ணகிரியில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் ஆவின் மேம்பாலத்தின் கீழ் வளைவில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி போலீசார் விரைந்து சென்று அந்த வழியாக வந்த வாகனங்களை மேம்பாலத்தை சுற்றி திருப்பி விட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Next Story