மாவட்ட செய்திகள்

செங்குன்றம் அருகே போதை மீட்பு மையத்தில் வாலிபர் அடித்துக் கொலை - 4 பேர் கைது + "||" + 4 arrested for beating youth to death at drug rehabilitation center near Chenkunram

செங்குன்றம் அருகே போதை மீட்பு மையத்தில் வாலிபர் அடித்துக் கொலை - 4 பேர் கைது

செங்குன்றம் அருகே போதை மீட்பு மையத்தில் வாலிபர் அடித்துக் கொலை - 4 பேர் கைது
செங்குன்றம் அருகே போதை மீட்பு மையத்தில் வாலிபர் இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனி விஜயா நகரில் ரூபன்பால் என்பவருக்கு சொந்தமான போதை மீட்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மன்னார் மண்டலத்தைச் சேர்ந்த வம்சி(வயது 19) என்பவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இதே மையத்தில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் வயலாநல்லூரைச் சேர்ந்த பென்னிஹின்(22), கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லாகுப்பத்தைச் சேர்ந்த தேவராஜ் (19), செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகரைச்சேர்ந்த யாசின் ஷரீப்(36), சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்த கேசவன்(19) ஆகிய 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவர்கள் 4 பேருக்கும், வம்சிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் வம்சியை சரமாரியாக அடித்துக்கொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கொலையான வம்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னிஹின், தேவராஜ், யாசின் ஷரீப், கேசவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.