மின் கம்பத்தில் செடி,கொடிகள் அகற்றப்படுமா
மின் கம்பத்தில் செடி,கொடிகள் அகற்றப்படுமா
திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதி சத்யாநகர் சாலை, ஜூபிட்டர் நிறுவனம் அருகில் செடி,கொடிகள் மின்கம்பம் வழியே படர்ந்து மின் இணைப்பு கம்பிகள் முழுதும் படர தொடங்கி விட்டது. இதனால் மின் கம்பத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் குறித்த நேரத்தில் கம்பத்தின் மேல் ஏறிடவோ பெரும் சிரமத்திற்கும் உள்ளாவார்கள். நாளடைவில் மின்கம்பிகளில் துருபிடிக்கவும் கூட நேரிடலாம். அப்போது அறுந்து விழவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆபத்து ஏற்படும். எனவே மின் வாரிய துறையினரால் கம்பங்களில் உள்ள செடி,கொடிகளை அகற்றி பழுது ஏற்படும் முன் சரி செய்ய நடவக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மாணவர்களின் கல்வியை
பாதிக்கும் ஒலிபெருக்கி சத்தம்
பெருமாநல்லூரை அடுத்த தட்டாங்குட்டை காமாட்சி அம்மன் கார்டன் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து அடிக்கடி அதிக சத்தத்துடன் பட்டாசுகளை வெடிப்பதும், அதிக ஒலியை வெளிப்படுத்தும் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து கேட்டால் அந்த பகுதி மக்களை தகாத வார்த்கைளால் பேசுவதாக கூறப்படுகிறது. இந்த சத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். மாணவர்கள் படிக்க முடியவில்லை. வெடி சத்தத்தில் குழந்தைகள் அச்சம் அடைகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
Related Tags :
Next Story