அழிவின் விளிம்பில் மண்பாண்ட தொழில்
அழிவின் விளிம்பில் மண்பாண்ட தொழில்
குன்னத்தூர் அருகே உள்ள கம்மாளகுட்டை, செங்காளி பாளையம், நாச்சிபாளையம் பகுதிகளில் மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பகுதியிலும் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழில் செய்து வந்தனர். தற்போது மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக இளைய தலைமுறையினர் இதை விருப்பம் கொள்ளாத காரணத்தினால் தற்போது ஊருக்கு ஒன்று அல்லது 2 குடும்பத்தினர் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகையோ, உபகரணங்களோ உண்மையான மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை. அதையும் சில இடைத்தரகர்கள் வேறு நபர்களுக்கு மாற்றி கொடுத்து அரசு உதவித்தொகையை பெற்றுக் கொள்கிறார்கள். மண்பாண்ட தொழில் செய்யும் ஒரு சிலர் அதற்கு தேவையான களிமண் எடுக்க பல கிலோ மீட்டர் தூரம் சென்று தான் எடுத்து வர வேண்டியுள்ளது. அதுவும் பழைய தலைமுறையினர் மட்டுமே செய்கிறார்கள். இளைய தலைமுறையினர் இந்த தொழிலை செய்வதில்லை. ஆகவே அரசு பலவித உபகரணங்களும் உதவித் திட்டங்களை வழங்கி மண்பாண்ட தொழிலை மேம்படுத்த ஆவன செய்ய வேண்டும் என இப்பகுதி ஒரு சில மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story