ஆம்பூரில் ஓடும் பஸ்சில் வடமாநில இளம்பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது
ஆம்பூரில் ஓடும் பஸ்சில் வடமாநில இளம்பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
ஆம்பூர்
ஆம்பூரில் ஓடும் பஸ்சில் வடமாநில இளம்பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
காதல் திருமணம்
ஒடிசா மாநிலம் லட்சுமிநாராயண மாதிர் கிராமத்தை சேர்ந்தவர் சமீர்குமார் மாலிக். இவரது மனைவி சுக்ரியா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சமீர்குமார் மாலிக்கும், சுக்ரியாவும் திருமணம் செய்துகொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வருகின்றனர்.
அங்கு சமீர் குமார்மாலிக் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்lநிலையில் சுக்ரியா கர்ப்பமான தகவல் ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சமீர்குமார் மாலிக்கும் சுக்ரியாவும் ஒடிசாவுக்கு செல்ல ஓசூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் விஜயவாடாவிற்கு செல்லும் பஸ்சில் புறப்பட்டனர்.
ஆண் குழந்தை பிறந்தது
சுமார் 11 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்றது. அப்போது சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பஸ்சில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து தாய் மற்றும் குழந்தையை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சுக்ரியவுக்கும், குழந்தைக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பஸ்சில் குழந்தை பிறந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story