காங்கிரஸ்கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ்கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2021 6:21 PM IST (Updated: 28 Nov 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சோளிங்கர்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ்கட்சி சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் மோட்டூர்-ரெண்டாடி வரை உள்ள ஏழு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று ரெண்டாடி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கார்த்திக்,  தாசரதி, மாநில பொதுகுழு உறுப்பினர் தாமோதரன், தொகுதி பொறுப்பாளர் ராஜா, பட்டறை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோளிங்கர் நகர தலைவர் கோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டார். 

ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ்சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், வழக்கறிஞர் ரகுராம் ராஜி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயவேல் ரெண்டாடி ஈஸ்வரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story