ஏரல் அருகே தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது


ஏரல் அருகே தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 28 Nov 2021 9:20 PM IST (Updated: 28 Nov 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது

ஏரல்:
ஏரல் அருகே தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் அந்த கிராம மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குளம் நிரம்பியது
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிவகளை குளம் நிரம்பியது. 
மேலும் தண்ணீர் அதிக அளவு வந்து சேர்வதால் சிவகளை பரும்பு பகுதியில் தாழ்வான குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது.
இதில் அந்த பகுதியில் குடியிருக்கும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
பள்ளிக்கூடங்களில் தங்கவைப்பு
இதையடுத்து கிராம மக்கள் பலர் அங்குள்ள இந்து ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஏரல் தாசில்தார் கண்ணன், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் விஜய் ஆனந்த், சிவகளை கிராம நிர்வாக அதிகாரி அனிதா, சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story