தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது


தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது
x
தினத்தந்தி 28 Nov 2021 9:40 PM IST (Updated: 28 Nov 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசாா் கைது செய்தனா்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 10 பேரை மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தியாகதுருகத்தை சேர்ந்த ஒலிமுகமது (வயது 33), ராஜீவ்காந்தி (36), சீனுவாசன் (40), முஹம்மது பாரூக் (37), சரண்ராஜ் (32), கார்த்திக் (27), செந்தில்குமார் (32), குமார் (28), சண்முக ஆனந்த் (31), பரமேஸ்வரன் (36) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர் சிலம்பரசன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஒலிமுகமது உள்ளிட்ட 10 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 40 புள்ளித்தாள், ரூ.3 ஆயிரத்து 690 ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிலம்பரசனை தேடி வருகின்றனர். 

Next Story