மன்னார்குடி அருகே அரசு பஸ் லாரி மோதல் 4 பேர் காயம்
மன்னார்குடி அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
மன்னார்குடி:-
மன்னார்குடி அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
பஸ்- லாரி மோதல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நீடாமங்கலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. மன்னார்குடி அருகே ரொக்ககுத்தகை கிராமம் அருகே எதிர் எதிரே வந்த அரசு பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் மன்னார்குடியை சேர்ந்த மதிவாணன் (வயது 59), கண்டக்டர் ஆலங்குடியை சேர்ந்த முருகேசன் (46), பஸ் பயணி மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளத்தை சேர்ந்த பார்கவி (33), லாரி டிரைவர் மன்னார்குடி அருகே உள்ள ஆதிச்சபுரம் ஓவர்சேரியை சேர்ந்த செல்வராஜ் (40) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக மன்னார்குடி-நீடாமங்கலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story