சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொள்ளிடம் அருகே கலெக்டர் நடவடிக்கையால் சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கலெக்டர் நடவடிக்கையால் சாராய வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சீயாளம் கிராமம் பெரியதெருவை சேர்ந்த துரை என்ற தமிழ்ச்ெசல்வன் (வயது 50). இவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் இவர் விற்பனை செய்து வரும் சாராயம் விஷத்தன்மை வாய்ந்தது என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் ஆகியோர் பரிந்துரையின்பேரில், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா உத்தரவின் பேரில் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, தமிழ்ச்செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை நாகை கிளை சிறையில் தமிழ்ச்செல்வனிடம் வழங்கினார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story