இந்த ஆண்டு இதுவரை 12,290 மெட்ரிக் டன் யூரியா வினியோகம்
ிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 12,290 மெட்ரிக் டன் யூரியா வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 12,290 மெட்ரிக் டன் யூரியா வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சாகுபடி
சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசுவரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரம் எக்டேர் வரை விவசாயம் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு வேளாண்மை துறை நடத்தும் தொடர் நடவடிக்கையால் இதுவரை 75 ஆயிரம் எக்ேடரில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 5 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு 11,017 மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 12 ஆயிரத்து 290 மெட்ரிக் டன் யூரியா வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல காம்ப்ளக்ஸ் உரங்கள் கடந்த ஆண்டு 6 ஆயிரத்து 927 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுஉள்ளது.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை 8,083 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுஉள்ளது ஏற்கனவே இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா மூடைகளில் 690 மெட்ரிக் டன் சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுஉள்ளது. இன்னும் கூடுதலாக 300 மெட்ரிக் டன் யூரியா உரங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப மாவட்டத்தில் உள்ள 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வழங்கப்படுகிறது எனவே சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவை யான உரங்களை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது உரகட்டுப்பாடு துணை இயக்குனர் பரமேசுவரன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story