தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 Nov 2021 12:02 AM IST (Updated: 29 Nov 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
பெரம்பலூர் மாவட்டம், பங்களா ஸ்டாப் நியூ காலனி  5வது குறுக்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பத்தை அமைத்து அதன் மூலம் அப்பகுதியில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
 விஜயா, நியூகாலனி, பெரம்பலூர். 
இதேபோல் திருச்சி மாநகராட்சி 47-வது  வார்டு கூனிபஜார் பகவதி அம்மன் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது  குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடைப்பை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், கூனிபஜார், திருச்சி. 

சாலையில் திரியும் மாடுகள் 
 புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை டவுன் தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு வரும் வழியில் மச்சுவாடி பகுதியில் பிரதான சாலையில் அதிக அளவில்  மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் வாகனங்கள் செல்லும்போது இவை திடீரென குறுக்கே செல்வதினால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்வதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்திருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதுக்கோட்டை. 

மேம்பாலம் அமைக்கப்படுமா? 
பெரம்பலூர் மாவட்டம், தேனூர் கிராமத்தில் இருந்து தொட்டியப்பட்டி  சாலையின் குறுக்கே செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக தரைபாலத்தில் அதிக அளவில் மழைநீர் செல்கிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தேனூர், பெரம்பலூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாநகராட்சி பெரிய மிளகுபாறை படுதெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. இவை அகற்றப்படாமல் உள்ளதால் இதனை கால்நடைகள் உண்ணுகின்றன. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரிய மிளகுபாறை, திருச்சி. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியங்குறிச்சி கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் செல்கிறது. இதில் பொதுமக்கள் நடந்து செல்வதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முனியங்குறிச்சி, அரியலூர். 

தார் சாலை வேண்டும் 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் எண்ணை ஊராட்சி கவுண்டர் தெரு பகுதியில்  60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதியும், சாலை வசதியும் இல்லாததால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இலுப்பூர், புதுக்கோட்டை. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் காமராஜ் நகர் அருகில் உள்ள டி.ஆர்.பி.நகரில் சாலை வசதி இல்லாததால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், டி.ஆர்.பி.நகர், திருச்சி. 

பாதாள சாக்கடையில் அடைப்பு 
திருச்சி மாநகராட்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணாநகர் 2வது வீதி விஸ்தரிப்பு பகுதியில் சாலையின் ஓரத்தில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கல்லுக்குழி, திருச்சி. 
இதேபோல் திருச்சி கருமண்டபம் செல்வநகரில் உள்ள பாதாள சாக்கடைகள் அனைத்தும் நிரம்பி சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி. 

குடிநீர் குழாயில் உடைப்பு 
திருச்சி மாவட்டம், கொடியாலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புலிவலம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. வெளியேறும் தண்ணீர் குடிநீர் குழாயின் அருகே குளம்போல் தேங்கி நிற்பதினால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புலிவலம், திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலை 
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பாலம் திண்டுக்கல் சாலையில்  பாலத்தின் முடிவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

டாக்டர் இன்றி பொதுமக்கள் அவதி 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மணமேடு கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம் மினி கிளினிக்குக்கு கடந்த ஒரு வாரமாக டாக்டர் வராததால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மணமேடு, திருச்சி. 

Next Story