பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2021 1:12 AM IST (Updated: 29 Nov 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி, 
பட்டாசு   தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும், சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகாசி பஸ் நிலையம் அருகில் நகர பொருளாளர் ஜெபஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மகாலெட்சுமி இந்த ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நகர தலைவர் ஜோதிமணி, சி.ஐ.டி.யு. கன்வீனர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை  நிறைவு செய்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் 75 பேர் கலந்து கொண்டனர்.

Next Story