ஆட்டோ டிரைவர் பலி; போலீஸ்காரர் படுகாயம்


ஆட்டோ டிரைவர் பலி; போலீஸ்காரர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Nov 2021 1:15 AM IST (Updated: 29 Nov 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். 
2 பேர் படுகாயம் 
திருச்சுழி தாலுகா என்.முக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சரவணசாஸ்தா (வயது 26). ஆட்டோ டிரைவர். இந்நிலையில் இவர் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆத்திப்பட்டி கோழிக்கடை முன்பு எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரவணசாஸ்தா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இந்த விபத்தில் சரவணசாஸ்தா மற்றும் எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சித்தலகுண்டு பகுதியை சேர்ந்த  பாண்டிதுரை (39) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். 
டிரைவர் பலி 
பாண்டிதுரை பரளச்சி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
அங்கு சரவணன் சாஸ்தா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டிதுரைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து சரவணசாஸ்தாவின் உறவினர் பூமிநாதன் (39) தாலுகா போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story